மசூதிகளும் அமைதியும் - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

மார்ச் 17, 2019 526

கிரைஸ்ட்சர்ச் (17 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ட்விட்டரில் #peacefulmosques என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயங்கரவாதி நடத்திய தூப்பக்கிச் சூடு தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலிய தீவிரவாதி (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். இந்தச் சம்பவத்துக்குப் பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த கொடூர சம்பவத்தை நினைவு கூறும் விதமாக பொதுமக்கள் சிலர் அமைதியான மசூதிகள் #peacefulmosques என டிவிட்டரில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு அருகேயுள்ள மசூதிகளின் அமைதியையும் அவற்றின் சிறப்பையும் அந்த மசூதிகளுடனான தங்கள் மகிழ்ச்சியான அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள தொடங்கியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...