நியூசிலாந்து ஹீரோ மியான் நயீம் ரஷீதுக்கு தேசிய விருது அறிவிப்பு!

மார்ச் 17, 2019 822

இஸ்லாமாபாத் (17 மார்ச் 2019): நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதியை துரத்திப் பிடிக்க முயன்ற மியான் நயீம் ரஷீதுக்கு தேசிய விருது அறிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில் அல் நூர் மசூதி மற்றும் டீன்ஸ் ஏவ் ஆகிய இரண்டு மசூதிகளிலும் துப்பாகி ஏந்திய பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர்.. அல் நூர் மசூதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரண்ட் என்ற தனி நபர் கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக சுட்டு வீழ்த்தினான். இந்த பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தின்போது மசூதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதி நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டபோதும், தோட்டாக்களை நெஞ்சில் வாங்கிக் கொண்டு பயங்கரவாதியை கட்டிப் பிடித்து பிற மக்களை காப்பாற்ற முயன்றார் மியான் நயீம் ரஷீத் என்ற பாகிஸ்தான் நட்டை சேர்ந்தவர். எனினும் இந்த தாக்குதலில் மியான் நயீம் ரஷீத் மற்றும் அவரது மகன் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மியான் நயீம் ரஷீதுக்கு அவரது வீரச் செயலை பாராட்டி தேசிய விருது அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...