நெதர்லாந்தில் பொதுமக்கள் மீது பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு!

மார்ச் 18, 2019 356

ஹாக் (18 மார்ச் 2019): நெதர்லாந்தில் உட்ரெச் நகரில் இன்று காலை பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நெதர்லாந்தில் உட்ரெச் நகரில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வண்டியில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினாn. அதன்பின் அங்கிருந்து தப்பிச்சென்றாn. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சமீபத்தில் நியூசிலாந்து மசூதிகள் இரண்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 50 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...