நியூசிலாந்தில் அனைத்து பெண்களையும் ஹிஜாப் அணிய அழைப்பு!

மார்ச் 20, 2019 641

ஆக்லாந்து (20 மார்ச் 2019): நியூசிலாந்து கிரிஸ்சர்ச் மசூதி பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமை நியூசிலாந்து பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்களது ஆதரவை தெரிவிக்குமாறு சமூக அமைப்புகள் பல அழைப்பு விடுத்துள்ளன.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

உலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நியூசிலாந்து மக்கள் இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையிலும், முஸ்லிம்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும், வரும் வெள்ளிக்கிழமை பலவகையான மனித நேய செயல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதில் ஒரு பகுதியாக பல்வேறு சமூக அமைப்புகள் நியூசிலாந்தில் உள்ள அனைத்து மத பெண்களும் வெள்ளிக்கிழமை அன்று ஹிஜாப் அணிந்து முஸ்லிம்களின் துக்கத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...