தொழுகைக்கான அழைப்பை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நியூசிலாந்து அரசு உத்தரவு!

மார்ச் 21, 2019 2017

ஆக்லாந்து (21 மார்ச் 2019): நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான அழைப்பை (பாங்கு) தேசிய தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களில் ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா எர்டோன் உத்தரவிட்டுள்ளார்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

உலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நியூசிலாந்து மக்கள் முஸ்லிம்களுக்கு தங்களது ஆதரவை பலவகைகளில் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) நியூசிலாந்தில் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிந்து ஒற்றுமையை வலியுறுத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை தொழுகைக்கான அழைப்பை (அதான்) தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய அந்நாடு பிரதமர் ஜெசிந்தா எர்டோன் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...