கலிபோர்னியா மசூதி மீது மர்ம நபர்கள் தீ வைப்பு!

மார்ச் 25, 2019 448

சான்டெய்கோ (25 மார்ச் 2019): அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகானத்தில் மசூதி ஒன்றின் மீது மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சான்டெய்கோ விலிருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இஸ்லாமிக் செண்டருக்கு சொந்தமான மசூதியின் மீது இந்த தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த தீ வைப்பில் பயங்கரவாதிகள் பின்னணி இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தீ பரவியபோது மசூதியின் உள்ளே 7 பேர் இருந்துள்ளனர். எனினும் அவர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

தீ பற்றியது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

நியூசிலாந்தில் நடத்தப்பட்ட மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் 50 உயிரிழந்த சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கலிஃபோர்னியாவில் மசூதி மீதான தீ வைப்பு சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...