நியூசிலாந்து தாக்குதல் பயங்கரவாதியை மன்னித்த மாமனிதர்! - வீடியோ!

மார்ச் 30, 2019 681

கிரைஸ்சட்ர்ட்ச் (29 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதி தாக்குதலில் என் மனைவியை கொலை செய்தவனை நான் மன்னித்துவிட்டேன் என்று உயிர் பிழைத்த ஃபரீத் அஹமத் தெரிவித்துள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிந்ழதனர். மேலும் படுகாயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றனர்.

உலகையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.

நியூசிலாந்து அரசும் இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக தெரிவித்த அதேவேளை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா எர்டோன் முஸ்லிம்கள் மீது காட்டிய அன்பும், அவரின் அடுத்தடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் உலக நாடுகளை ஆச்சர்யப் பட வைத்தது.

இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலில் தனது மனைவியை பற்கொடுத்த ஃபரீத் அஹ்மத் என்பவர், "நான் நியூசிலாந்தில் அமைதியை விரும்புகிறேன். என் மனைவியை கொன்றவனை நான் மன்னித்து விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் இதனை தெரிவித்தார். ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற இந்த இரங்கல் நிகழ்ச்சியில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா எர்டோன் மற்றும் 60 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...