ஆஃப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 3 அமெரிக்க ராணுவத்தினர் படுகொலை!

ஏப்ரல் 09, 2019 317

காபூல் (09 ஏப் 2019): ஆப்கானிஸ்தானில் நடத்தப் பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 அமெரிக்க படையினர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் இயக்கத்தினர் மீது டவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் வடமேற்கில் பட்கிஸ் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 48 மணிநேரம் கூட்டுப்படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 100 தலிபான் இயக்கத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 35 பேர் காயமடைந்ததாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

இருதரப்புக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 ராணுவ வீரர்கள் 4 போலீசார் என 12 பேர் உயிரிழந்ததாகவும் 34 பேர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அங்கு நடத்தப் பட்ட பயங்கரவாத குண்டு வெடிப்பு தாக்குதலி 3 அமெரிக்கப் படையினரும் கொல்லப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...