போரை விட வறுமையை ஒழிப்பதே என் நோக்கம் - இம்ரான்கான் கருத்து!

ஏப்ரல் 10, 2019 392

இஸ்லாமாபாத் (10 ஏப் 2019): இந்தியா மீது போர் தொடுப்பதை விட வறுமையில் உள்ள 100 மில்லியன் மக்களை மீட்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இதியா கொடுத்த பதிலடி தாக்குதல் அதனை தொடர்ந்து இரு நாட்டு எல்லைகளிலும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க விரும்பினாலும், இம்ரான் கான் அமைதியையே விரும்புகிறார். அதனையே ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இம்ரான் கான் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "இந்தியாவில் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் கனவிலும் கூட நினைக்கவில்லை. இந்தியாவில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு இஸ்லாமியர்கள் தாக்கப்படுகிறார்கள்.

அங்கு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சி தீர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவர்களுக்கு அந்த தைரியம் இருக்கிறதா என்று தெரியவில்லை. மாறாக பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் ஏதாவது முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.

அண்டை நாடுகளுடன் நட்பை பேணுவதே என் நோக்கம், போர் தீர்வாகாது. நம்மை சுற்றியுள்ள 100 மில்லியன் மக்களின் வறுமையை போக்கினாலே தீர்வு ஏற்பட்டு விடும்." என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...