வாட்ஸ் அப் ஃபேஸ்புக் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி!

ஏப்ரல் 14, 2019 317

புதுடெல்லி (14 ஏப் 2019): பல நாடுகளில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கணினியில் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது முடங்குவதாக பல பயனாளிகள் தெரிவித்தள்ளனர்.

உலகம் முழுவதும் இந்த பாதிப்பு காணப்படுகிறது. இதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. ட்விட்டர் சமூக வலைதளத்தில் தற்போது #FacebookDown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...