தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஏப்ரல் 18, 2019 199

தைபே (18 ஏப் 2019): தைவானில் இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.

தைவானில் இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடு கள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

ஹுயாலியன் நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...