பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஏப்ரல் 22, 2019 304

மணிலா (22 ஏப் 2019): : பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகள் போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...