மலேசியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோர் சிறையிலடைப்பு!

ஏப்ரல் 30, 2019 358

கோலாலம்பூர் (30 ஏப் 2019): இந்த ஆண்டு மலேசியா முழுதும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைகளில் 18,915 சட்டவிரோத குடியேறிகள் பல்வேறு குடிவரவு குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இத்தேடுதல் வேட்டைகளில் மொத்தம் 81,833 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதாக மலேசிய குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம், சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலை வழங்கிய முதலாளிகள் 429 பேரும் இக்காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக 6,484 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அத்துடன் 4,291 வங்கதேசிகள், 1,828 மியான்மரிகள், பிலிப்பைன்சைச் சேர்ந்த 1,720 பேர் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த 4,492 பேர் சிறைப்படுத்தப்பட்டதை மலேசிய குடிவரவுத்துறை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...