ரஷ்யா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 41 பேர் பலி!

மே 06, 2019 450

மாஸ்கோ (06 மே 2019): ரஷ்யாவில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோஃப்லோட் (Aeroflot Flight SU1492) விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக திரும்ப தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது திடீரென புகை மூட்டத்துடன் தீ வேகமாக பரவியது. இதையடுத்து அவசரமாக விமான ஓடுதளத்தில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசர வழி மூலமாக பயணிகள் வெளியேற்றப் பட்டனர். எனினும் இந்த விபட்தில் 41 பேர் உயிரிழந்தனர், 37 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...