பாகிஸ்தான்: லாகூரில் மசூதி அருகே குண்டு வெடிப்பு - 7 பேர் பலி!

மே 08, 2019 307

லாகூர் (08 மே 2019): பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிர் இழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள புகழ்பெற்ற சூபி மசூதியில் இன்று காலை வழக்கமான தொழுகை நடைபெற்றது. அப்போது, போலீசாரின் வாகனம் அருகே திடீரென குண்டு வெடித்தது. இதில் போலீஸ் வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது.

இந்த தாக்குதலில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 24 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலீசாரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...