குர்ஆன் வசனத்தை ஒலிபெருக்கியில் ஓதிய இமாமுக்கு கத்திக்குத்து!

மே 13, 2019 634

மலேசியா (13 மே 2019): இமாம் ஒலிபெருக்கியில் குரான் வசனத்தை ஓதியதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் இமாமை கத்தியால் குத்தியுள்ளார்.

மலேசியாவில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, இமாம் ஒலிப்பெருக்கியில் குர்ஆன் வசனத்தை ஓதினார்.

இந்நிலையில் மசூதியின் அருகில் இருந்த இளைஞருக்கு உறங்க இது இடையூறாக இருந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் தொழுகை நடத்திய இமாமை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த இமாம் சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதற்கிடையே குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்.

 

 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...