இம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி!

மே 22, 2019 469

கராச்சி (22 மே 2019): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கச்சா எண்ணெய் கனவு தோல்வி அடைந்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கராச்சி அரபிக் கடலில் கச்சா எண்ணெய் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இதற்கான முயற்சியில் அந்நாடு ஈடுபட்டது. ஆனால் நான்கு மாதமாக எடுத்த முயற்சி தற்போது நிறுத்தப் பட்டுள்ளது.

அங்கு எண்ணெய் இல்லை என்றும் அதனால் அந்த முயற்சி நிறுத்தப் பட்டதாகவும் இதுகுறித்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க பல வகைகளில் முயன்று வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே கச்சா எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியில் அந்நாடு ஈடுபட்டது. ஆனால் அங்கு எண்ணெய் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதால் அந்த முயற்சி தற்போது நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் இம்ரான் கானின் கச்சா எண்ணெய் கனவு தோல்வி அடைந்துள்ளது.

இதற்கிடையே இம்ரான் கான் எங்கள் முயற்சி தொடரும் விரைவில் நல்ல செய்தி எங்கள் நாட்டு மக்களுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...