தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த மியான்மர் குடியேறிகள்

மே 30, 2019 510

தாய்லாந்து (30 மே 2019): தாய்லாந்தின் பங் கிலாம்(Bang Klam) மாவட்டம் சோங்கிலா(Songkhla) பகுதியில் ஆசிய நெடுஞ்சாலை அருகே வீட்டொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 மியான்மர் குடியேறிகளை தாய்லாந்து குடிவரவு காவல்துறை மீட்டுள்ளது.

இவர்களை அடைத்து வைத்திருந்த மியான்மரை சேர்ந்த மனித கடத்தல்காரர் ஆங் சனாய்(29) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை மலேசியாவுக்கு கடத்த இவர் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மீட்கப்பட்ட குடியேறிகள் மிகச்சோர்வான நிலையில் காணப்பட்டதாக, காவல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இம்மீட்பு நடவடிக்கை சில தினங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மீட்கப்பட்ட 14 குடியேறிகளில் 5 பெண்களும் 9 ஆண்களும் இருந்திருக்கின்றனர்.

குடியேறிகள் அனைவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் மனித கடத்தல் குற்றத்துக்காக கடத்தல்காரர் ஆங் சனாய் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...