நைஜீரிய அதிபராக மீண்டும் முஹம்மது புஹாரி பதவியேற்பு!

மே 30, 2019 352

நைஜீரியா (30 மே 2019): நைஜீரியாவின் அதிபராக முஹம்மது புஹாரி (புதன்கிழமை) பதவியேற்றார்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவின், நாடாளுமன்றத்தின் 360 கீழ்சபை மற்றும் 109 மேல்சபை உறுப்பினர்கள் பதவிக்கும் ஜனாதிபதி பதவிக்கும் சேர்த்து கடந்த மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் அந்நாட்டின் வரலாறில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதி பதவிக்கு 73 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சுமார் ஒன்றரை கோடி (56 சதவீதம்) வாக்குகளை பெற்று தற்போதையை அதிபர் முஹம்மது புஹாரி மீண்டும் வெற்றி பெற்றார்.

எதிர்க்கட்சி சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் அதிபருமான மஹ்மூத் யாக்குபு சுமார் ஒருகோடியே 13 இலட்சம் வாக்குகளைப் (41சதவீதம்) பெற்று தோல்வியைத் தழுவினார்.

இதனிடையே, அதிகாரப்பூர்மாக வெளியான இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் முஹம்மது புஹாரியின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...