பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது!

ஜூன் 10, 2019 344

இஸ்லாமாபாத் (10 ஜூன் 2019): பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் ஊழல் மற்றும் வங்கி மோசடி வழக்கில் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். போலியான வங்கி கணக்குகளை தொடங்கியதா சர்தாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ரூ. 15 கோடி பணத்தை போலி வங்கி கணக்குகளை ஆரம்பித்து மாற்றியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்நாட்டின் ஊழல் எதிர்ப்பு அமைப்பு விசாரணை நடத்தி வந்தது.

பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சர்தாரி கேட்ட முன் ஜாமீனை அளிப்பதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றம் ரத்து செய்திருந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய கைது வாரன்ட்டை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு அனுப்பியிருந்தது. இந்த நிலையில் சர்தாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...