அமெரிக்காவில் விமான விபத்து!

ஜூன் 22, 2019 265

நியூயார்க் (22 ஜூன் 2019): அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்து ஒன்றில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் அமைந்துள்ளது. தீயை கக்கும் எரிமலைகள் மற்றும் ஏராளமான தீவு கூட்டங்களை உள்ளடக்கிய ஹவாய் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாக ஓவாஹு விளங்கி வருகிறது. ஓவாஹுவின் தலைநகரான ஹோனோலுலுவில் உள்ள டில்லிங்ஹாம் விமானத்தளம் அருகே பறந்துக் கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான இரட்டை என்ஜின் விமானம் (உள்ளூர் நேரப்படி) நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

இந்த விபத்தில் 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அந்த விமானத்தில் இருந்த அனைவரும் ‘ஸ்கை டைவிங்’ சாகசத்தில் ஈடுபடும் முயற்சியில் சென்றதாக தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...