ரஷ்யாவில் விமான விபத்து - பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த விமானிகள்!

ஜூன் 28, 2019 363

சைபீரியா (28 ஜூன் 2019): ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் பயணிகளை காப்பாற்ற முயற்சித்த விமானிகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா, சைபீரியாவிலுள்ள நிஸ்னியாங்கார்க் நகரில் அமைந்திருக்கும் விமான நிலையத்திலிருந்து விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே அந்த விமானத்தை தரையிறக்கி நிறுத்த விமானிகள் அதீத முயற்சி செய்தனர். அது எதுவும் கைகூடாத நிலையில், அந்த விமானத்தை ஒரு வீட்டில் மோதி நிறுத்தினர். இதனால் அந்த விமானத்தின் முன்பகுதியில் தீ பற்றியது. இதில் அந்த இரு விமானிகளும் இறந்தனர். 7 பயணிகள் படுகாயமடைந்தனர். பயணிகளைக் காப்பாற்ற விமானிகள் செய்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...