பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் முஸ்லிம் குழந்தைகள் - அதிர வைக்கும் தகவல்!

ஜூலை 07, 2019 1040

ஜின்ஜியாங் (07 ஜூலை 2019): சீனாவில் முஸ்லிம் குழந்தைகள் அவர்களது குடும்பங்களிலிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப் படுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. அதன் ஒருபகுதியாக, சீனாவின் ஜின்ஜியாங் என்ற மேற்கு மாகாணத்தில் வீகர் இன முஸ்லிம் குழந்தைகள் அவர்களுடைய குடும்பங்கள், மத நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்திருக்கிறார்கள் என்று பதிவேடுகள் காட்டுகின்றன. தடுப்பு முகாம்கள் அல்லது சிறைகளில் அவர்களது பெற்றோர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜின்ஜியாங்கில் பெரியவர்களின் அடையாளத்தை மாற்றுவதற்கான முயற்சி நடைபெறுவதுடன், குழந்தைகளை அவர்களுடைய அடிப்படை வேர்களில் இருந்து அகற்றுவதற்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இஸ்தான்புல் நகரில் டஜன் கணக்கிலானவர்கள் தங்களுடைய கதைகளைச் சொல்வதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். பலரும் தங்களுடைய குழந்தைகளின் புகைப்படங்களை கையில் வைத்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் தங்கள் தாயகமான ஜின்ஜியாங்கில் காணாமல் போயிருப்பதாகக் கூறுகிறார்கள்.

''அவர்களை யார் கவனித்துக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது'' என்று ஒரு தாயார் சொல்கிறார். தன்னுடைய மூன்று மகள்களின் புகைப்படத்தைக் காட்டிய அவர், ''குழந்தைகளுடன் எங்களுக்குத் தொடர்பே இல்லை'' என்று கூறினார்.

மூன்று மகன்கள், ஒரு மகள் ஆகியோரின் புகைப்படத்தை வைத்திருக்கும் இன்னொரு தாய், ''குழந்தைகளை அனாதை இல்லங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்'' என்று கண்ணீரை துடைத்தபடி கூறுகிறார்.

இது கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வருகின்றன என்பது அதிர வைக்கும் தகவல்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...