ஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்!

ஜூலை 11, 2019 419

புதுடெல்லி (11 ஜூலை 2019): உலகம் முழுவதும் சுமார் இரண்டை கோடி ஆண்ட்ராய்டு ஃபோன்கள் மால்வேர் எனப்படும் வைரஸால் தாக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏஜெண்ட் ஸ்மித் எனும் மால்வேர் சர்வதேச அளவில் உள்ள தொலைபேசிகளை தாக்கியுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோர்க்கு இணையாக உள்ள சில அப்ளிகேஷன்களால் இந்த வைரஸ் பரவி உள்ளதாக தொழில்நுட்ப ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனாளர்களை குறிவைத்து இந்த தொழில்நுட்பத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் உட்பட உலக அளவில் இரண்டரை கோடி பயனாளர்கள் மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இது பயனாளர்களுக்குத் தெரியாமலே நடத்தப்பட்டு உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கூகுள் ஃப்ளேஸ்டோர் மூலம் செயலிகளை தரவிறக்கம் செய்யாமல், சைனாவைச் சேர்ந்த 9 ஆப்ஸ் மூலம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை டவுன்லோட் செய்வதனால் எளிதாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்கள் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகிறது.

மேலும், இதுபோன்ற மால்வேர் மூலம் சமூக வலைதள அப்ளிகேஷன்களில் ஆபாச விளம்பரங்கள், போலி விளம்பரங்களை வெளியிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது மாதிரியான விளம்பரங்களால் கூலிகன், காப்பிகேட் போன்ற மால்வேர்கள் பல கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்கள் தங்களது கேட்ஜெட்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்தும்படி சைபர் க்ரைம் போலிஸார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலால் தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...