நேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி!

ஜூலை 14, 2019 333

நேபாளம் (14 ஜூலை 2019): நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கனமழையால் நேற்று வரை 28 பேர் பலியாகினர் என அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்நிலையில், நேபாளத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...