சிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்!

ஜூலை 21, 2019 357

இஸ்லாமாபாத் (21 ஜூலை 2019): அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளார்.

3 நாள் பயணமாக இம்ரான்கான் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் டிரம்பை சந்திக்க இருக்கிறார்.

பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் தலைவர்கள் ராணுவ விமானத்திலோ அல்லது தனி விமானத்திலோ பயணம் செய்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானோ பயணிகள் விமானமான ‘கத்தார் ஏர்வேசில்’ பயணம் செய்தார். சிக்கன நடவடிக்கையாக, பயணிகள் விமானத்தில் இம்ரான்கான், பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அவரது இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் அமெரிக்க எம்.பி.க்களையும், அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்களையும் சந்திக்க இருக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...