கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு!

ஜூலை 27, 2019 280

காத்மண்டு (27 ஜூலை 2019): நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் மொத்தம் உள்ள 77 மாவட்டங்களில் 64 மாவட்டங்கள் கனமழையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 67 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், இதுவரை 40 பேர் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி மாயமாகியுள்ளனர். மழை தொடர்பான விபத்துகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ராணுவம் உள்பட அனைத்து பேரிடர் மீட்பு துறைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...