ஷாப்பிங் மாலில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி!

ஆகஸ்ட் 04, 2019 261

டெக்ஸாஸ் (04 ஆக 2019): அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள வால்மார்ட் ஷாப்பிங் மாலில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ என்ற இடத்தில் வால்மார்ட் எனப்படும் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக 21 வயது கொண்ட ஒரு நபரை போலீசார் பிடித்துள்ளதாகவும், அவனது பெயர் பேட்ரிக்குரிஷியஸ் என்றும் கூறப்படுகிறது. டல்லாஸ் பகுதியில் இருந்து இந்த நபர் வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கியால் சுட்டது ஒருவன் மட்டுமிருக்காது இரண்டு மூன்று பேர் சேர்ந்து இதனை நடத்தியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ள போலீசார், தற்போது ஷாப்பிங் மாலை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...