டெக்ஸாஸை தொடர்ந்து அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல் - 10 பேர் பலி!

ஆகஸ்ட் 04, 2019 258

டெய்டன் (04 ஆக 2019): அமெரிக்காவில் டெக்ஸாசில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து மற்றும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் டெய்டன் (Dayton) பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த துப்பாக்கி பிரயோகம் குறித்த மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...