காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்க ஐ.நா மறுப்பு!

ஆகஸ்ட் 10, 2019 442

இஸ்லாமாபாத் (10 ஆக 2019): காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து இந்திய அரசால் நீக்கம் செய்யப் பட்டதை அடுத்து இவ்விவகாரத்தில் தலையிடும்படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்க ஐ.நா மறுத்துவிட்டது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிடும்படி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடந்த 6ம் தேதி ஐ.நா. மன்றத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவும் இந்திய அரசு மேற்கொணட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த கடிதத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் நிராகரித்துவிட்டார். பாகிஸ்தானின் கடிதத்தை ஏற்க முடியாது என்றும் அதன் எந்தவித கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாது என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விவகாரத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும்படி அமெரிக்கா, சீனா, மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கூறியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...