மலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறையில் புகார்!

ஆகஸ்ட் 17, 2019 1254

கோலாலம்பூர் (17 ஆக 2019): மலேசிய அமைச்சர் மற்றும் பினாங்கு முதல்வர் மீது மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த புகாரில், மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாகிர் நாயக் மலேசிய அரசு சிறுபான்மையினரை நடத்துவதை பாராட்டி பேசியதாகவும் ஒரு இடத்திலும் சிறுபான்மையினர் மனது புண்படும் படி பேசவில்லை என்றும் ஆனால் மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி மற்றும் கிள்ளாங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸ் முனியாண்டி, மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகியோர் தனக்கு எதிராக வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக புகார் அளித்தார்.

இந்தியாவில் நுழைய முடியாத நிலையில் ஜாகிர் நாயக் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக், சமீபத்தில் மலேசிய மக்களிடையே அமைதியை சீர் கெடுக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஜாகிர் நாயக் தன் மீது அவதூறு பரப்பியதாக மலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது புகார் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...