திருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி!

ஆகஸ்ட் 18, 2019 347

காபூல் (18 ஆக 2019): ஆப்கானிஸ்தானில் திருமண விருந்து ஒன்றில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 63 -க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு எத்ந அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...