ஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி!

ஆகஸ்ட் 19, 2019 483

கோலாலம்பூர் (19 ஆக 2019): மலேசியாவில் ஜாகிர் நாயக் இன அரசியல் பேசியது துரதிர்ஷ்ட வசமானது என்று மலேஷிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் சமீபத்தில் மலேசியாவில் பேசிய கருத்து அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல எதிர் கட்சிகள் அவரை நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் டாக்டர் மஹாதீர் முகமது இதுகுறித்து தெரிவிக்கையில், “ ஜாகிர் நாயக் மத போதனைகள் கொடுத்தால் அது குறித்து எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வெளிப்படையாக ஜாகிர் மலேசியாவில் இன அரசியலில் ஈடுபட விரும்புகிறார்." என்று பிரதமர் மஹாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு நாடு கடத்த இயலாது என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே "நான் பேசியது திரித்துக் கூறப்பட்டு என் மீது அவதூறு பரப்ப்பப் படுகின்றன." என்று ஜாகிர் நாயக் மீது குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தகது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...