மலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை!

ஆகஸ்ட் 21, 2019 356

கோலாலம்பூர் (21 ஆக 2019): மலேசியாவில் ஜாகிர் நாயக் இனி எந்த கூட்டங்களிலோ சமூக வலைதளங்களிலோ பேசக் கூடாது என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

மலேசியாவில் சமீபத்தில் ஜாகிர் நாயக் பேசிய பேச்சு அந்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு சிறுபான்மையினரான சீனர்கள், இந்துக்கள் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் ஏற்கனவே ஜாகிர் நாயக்கிற்கு ஒருமித்த ஆதரவை தெரிவித்து வந்த அந்நாட்டு அரசு தற்போது அவருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக, மத பிரச்சாரங்களில் நாட்டின் அரசியல் நுழைவதை ஏற்க முடியாது என்று அந்நாட்டின் பிரதமர் மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறை விசாரணை முடியும் வரை டாக்டர் ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமித் பாடோர் தெரிவித்தார்.

மேலும் ஜாகிர் நாயக் பேசிய பேச்சின் உண்மைகளை கண்டுபிடிப்பது தொடர்பாகவும், விசாரணையை எளிதாக்குவதற்கும் தற்காலிகமாக அமைதியை நிலைநிறுத்துவதற்கும் இம்முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...