ஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்

ஆகஸ்ட் 22, 2019 655

கோலாலம்பூர் (22 ஆக 2019): இஸ்லாமிய மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் விசயத்தில் மலேசியாவை விட்டு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் சமீபத்தில் ஜாகிர் நாயக் பேசிய பேச்சு அந்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு சிறுபான்மையினரான சீனர்கள், இந்துக்கள் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் பிரதமர் மஹாதீர் முஹம்மது ஜாகிர் நாயக்கின் செயலால் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தனர். அவர் நாடு கடத்தப் படலாம் என்ற தகவலும் வெளியானது

இதற்கிடையே இவ்விவகாரத்தில் தனது கருத்து திரித்துக் கூறபட்டதாக தெரிவித்த ஜாகிர் நாயக், தனது பேச்சு குறித்து மன்னிப்பும் கோரியிருந்தார்.

இந்நிலையில் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாது என்று பிரதமர் மஹாதிர் முதம்மது தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...