மலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 23, 2019 408

கோலாலம்பூர் (23 ஆக 2019): மலேசியாவில் சனிக்கிழமை அன்று நடைபெறும் பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று மலேசிய போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேசியாவில் சமீபத்தில் ஜாகிர் நாயக் பேசிய பேச்சு அந்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு சிறுபான்மையினரான சீனர்கள், இந்துக்கள் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக வரும் 24 ஆம் தேதி அன்று இந்தியர்கள் மற்றும் பிற இனங்களுக்கு சம உரிமைகள்‘ குழுவின் அமைப்பாளர்கள், லிட்டில் இந்தியா, பிரிக்பீல்ட்ஸ் நகரில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பேரணி குறித்த தகவல் முழுமையானது அல்ல என்றும், இது தொடர்பாக, மக்களின் பாதுகாப்பையும், நல்வாழ்வையும் உறுதி செய்வதற்காக பொது மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று பிரிக்பீல்ட்ஸ் காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே தெரிவித்துள்ளார்.

இதனிடையே இதன் ஏற்பாட்டாளரான சங்கர் கணேஷ் கூறுகையில், இந்த பொதுக் கூட்டம் பிரச்சனைகள் இல்லாமல் தொடரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...