ஜாகிர் நாயக்கிற்கு எதிரான போராட்டம் ரத்து!

ஆகஸ்ட் 24, 2019 446

கோலாலம்பூர் (24 ஆக 2019): மலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக இன்று (சனிக்கிழமை) நடைபெறவிருந்த போராட்டக் கூட்டம் ரத்து செய்யப் பட்டதாக இந்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெற இருந்த ஜாகிர் நாயக்கிற்கு எதிரான கூட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரிடமிருந்து அழைப்புக் கிடைத்ததாக அதன் ஒருங்கிணைப்பாளர் சங்கர் கணேஷ் கூறினார். இதனை அடுத்து இந்த கூட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் காவல் துறையினரின் அனுமதி பெற ஏற்பாட்டாளர் தவறியதாலும் இன்று நடைபெற இருந்த கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக சங்கர் தெரிவித்தார்.

இதற்கிடையே நேற்றிரவு வெள்ளிகிழமை லிட்டில் இந்தியா, பிரிக்பீல்ட்ஸில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்ட தொடர்பாக, காவல் துறையினர் அதன் இரண்டு ஏற்பாட்டாளர்களை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...