அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் ஆஸ்திரேலியா

ஆகஸ்ட் 25, 2019 268

சிட்னி (25 ஆக 2019): ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்கு சரியான வழகியில் மருத்துவ உதவி வழங்ப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் ஆஸ்திரேலிய மருத்துவமனைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது.

தற்போது, அதனை நீக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதாவை’ ஆளும் லிபரல் கூட்டணி அரசு சமர்பித்துள்ளது.

மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள மருத்துவ வசதி அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கும் விதத்தில் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது எனக் கூறியிருக்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆஸ்திரேலிய இயக்குனர் எலைனி பியர்சன்.

அந்த வகையில், லிபரல் அரசின் இம்மசோதாவுக்கு அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...