பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு!

ஆகஸ்ட் 31, 2019 396

இஸ்லாமாபாத் (31 ஆக 2019): பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.

பெட்ரோலிய கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலையில் இந்த விலைச்சரிவின் பலன்கள் மக்களை சென்று சேரும் வகையில் பெட்ரோல், டீசல், மண்எண்ணை விலையை 5 ரூபாய் வரை குறைக்க இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு செய்தி தொடர்பாளர் பிர்தவுஸ் ஆஷிக் அவான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ‘புதிய பாகிஸ்தான்’ அரசு தனது இரண்டாம் ஆண்டில் பயணிக்கும் இவ்வேளையில் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...