தரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்!

செப்டம்பர் 21, 2019 222

வாஷிங்டன் (21 செப் 2019): தரமற்ற சிகெரட்டுகளால் அதிவிரைவில் நுரையீரல்கள் உள்ளிட்ட உடல் உருப்புகள் கெட்டுப் போவதாக வாஷிங்டன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகை பிடிப்பது எந்த வகையிலும் உடலுக்கு நல்லதல்ல. அதிலும் என்ன காரணம் கூறினாலும் நிக்கோடினால புற்று நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தரமற்ற விலை குறைந்த சிகெரட்டுகள் சந்தைக்கு வந்துள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் மிக விரைவில் நுரையீரல் உள்ளிட்ட உடலின் முக்கிய உருப்புகள் கெட்டுப் போவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தரமற்ற சிகெரட்டுகளை உபயோகப்படுத்தியதாக கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 530 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...