அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

செப்டம்பர் 22, 2019 182

நியூயார்க் (22 செப் 2019): அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நேற்றிரவு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

வார இறுதி நாள் என்பதால் நேற்று மதுபான விடுதியில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர்கள் சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு மதுபான விடுதியில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத வாடிக்கையாளர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலா பக்கமும் சிதறியடித்து ஓடினர்.

அப்போது இரண்டு பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் மதுபான விடுதியை விட்டு உடனடியாக தப்பிச்சென்றுள்ளனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பியவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...