காண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை!

செப்டம்பர் 22, 2019 260

அர்ஜெண்டினா (22 செப் 2019): அர்ஜெண்டினாவில் காண்டம் விற்பனை சரிந்துள்ளதால், அந்நாட்டு அரசு பெரிதும் கவலை அடைந்துள்ளது.

காண்டம் விற்பனைக்கு பெயர் போன தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் காண்டம் விற்பனை பெரிய அளவில் சரிந்துள்ளது. இது இப்போது மிகப்பெரிய அளவில் நாணய மதிப்பு சரிவி, பணவீக்கம், வேலைவாய்ப்பு இழப்பு போன்றவை ஏற்படும் என அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பொருளாதார சரிவை சந்தித்துள்ளதால் இப்போது இதனையும் அந்நாட்டு அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகரிக்கும் என்ற கவலையும் ஒருபுறம், மறுபுறம் கருத்தடை பொருட்களைப் பயன்படுத்தாத போது பல தரப்பட்ட நோய்கள் உருவாகவும் வழி வகுக்கும் என்ற ஆரோகியம் சார்ந்த கவலையும் அந்நாட்டு அரசுக்கு உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...