விசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு!

செப்டம்பர் 23, 2019 266

சிட்னி (23 செப் 2019): கடுமையான குற்றம் புரியும் வெளிநாட்டினரை நாடுகடத்துவது தொடர்பான ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியின் பரிந்துரைகளை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது.

“இந்த சட்டதால் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்தால், ஒரு எளிமையான வழி உள்ளது. எந்த கடுமையான குற்றத்தையும் ஆஸ்திரேலியாவில் செய்யாதீர்கள், பாலியல் குற்றத்தை செய்யாதீர்கள், ஆயுதக்குற்றத்தை செய்யாதீர்கள், குடும்ப வன்முறையை தடுக்கும் உத்தரவை மீறாதீர்கள்,” எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன்.

ஏற்கனவே உள்ள சட்டத்தில் எதற்கு திருத்தங்கள் என்பதற்கு அரசால் விளக்கம் அளிக்கமுடியவில்லை எனக் கூறியுள்ள ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் நிழல் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ்டினா கெனீஅலே, ஆளும் லிபரல் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கிறார்.

“கடுமையான குற்றங்கள் புரியும் வெளிநாட்டினரின் விசாவை ரத்து செய்து நாடுகடத்துவதற்கு குடிவரவுத்துறை அமைச்சருக்கு ஏற்கனவே அதிகாரம் உள்ளது. 2014 இடப்பெயர்வு சட்டத்தில் திருத்தங்கள் கொண்ட வந்தபோது லேபர் கட்சி அதனை ஆதரித்தது,” எனக் கூறியுள்ளார் கிறிஸ்டினா. அந்த வகையில், கடந்த 2014 முதல் 4700 வெளிநாட்டினரின் விசாக்களை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது.

தற்போதைய திருத்தங்களின் படி ஒரு நாள் கூட வெளிநாட்டினர் சிறையில் இருக்க வேண்டியதில்லை என்றும் விசா ரத்து செய்யப்படுவதற்கு தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டியது கூட கிடையாது என்றும் கூறியுள்ளார் கிறிஸ்டினா.

இச்சட்டத்தல் உள்ள இவ்வாறான தன்மையை, ஏற்கனவே உள்ள கடுமையான குற்றம் (குறைந்தபட்சம் ஓராண்டு தண்டிக்கப்பட்ட நபர்) என்பதற்கான வரையறையை தொடர வேண்டும், நியூசிலாந்தினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை கணக்கில் கொள்ள வேண்டும் என லேபர் கட்சி அரசுக்கு தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகளை லிபரல் கூட்டணி தலைமையிலான ஆஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது.

“வெளிநாட்டினர் எங்கள் நாட்டின் விருந்தாளிகள் தான். நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். ஆனால், ஆஸ்திரேலியாவில் கடுமையான குற்றம் புரிந்தால், நீங்கள் வரவேற்கப்பட மாட்டீர்கள்,” எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் டேவில் கோலிமன்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...