ரானிடிடின் மருந்துகளால் (நெஞ்சு எரிச்சல் மருந்து) புற்று நோய் வர வாய்ப்பு!

செப்டம்பர் 25, 2019 405

நியூயார்க் (25 செப் 2019): ரானிடிடின் (நெஞ்சு எரிச்சல் மருந்து) மருந்துகளால் புற்று வரும் அபாயம் உள்ளதக சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது.

பொதுவாக நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றுக்கு ரானிடிடின் வகை மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் எட்டு நிறுவனங்களின் ரானிடிடின் வகை மருந்து களில் அனுமதிக்கப்பட்ட அனைத்துலக அளவுக்கு மேல் நைட்ரோசமைன், என்-நைட்ரோசோடிமீத்தலமைன் கலந்துள்ளாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.

நைட்ரோசமைனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் என்று அண்மைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் ரானிடிடின் வகை மருந்துகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது .அஸிலோக் (Aciloc), ஆபோ-ரானிடிடின் (Apo-Ranitidine), ஹைஸான் (Hyzan), நியோசெப்டின்(Neoceptin), வெஸிகா(Vesyca), ஸானிடிடின்(Xanidine), ஸான்டாக்(Zantac) மற்றும் ஸைனால்-150 (Zynol-150) ஆகியவை விற்கவும் மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றுக்கு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்ட எட்டு மருந்துகள் ஆகும்.

இந்தியாவிலும் இவ்வகை மருந்துகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...