முஸ்லிம்களை மேலும் மேலும் வேதனை படுத்தாதீர்கள் - இம்ரான் கான் பளீர் பேச்சு!

செப்டம்பர் 28, 2019 588

நியூயார்க் (28 செப் 2019): உலகில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக திட்டமிட்டே சித்தரிக்கின்றனர். வேறு மதங்களில் தீவிரவாதம் உள்ளதை ஏன் மறக்கடிக்கப் படுகின்றன? என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய இம்ரான் கான் பேசியதாவது

செப்டம்பர் மாதம் 11ம் தேதி 2001ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமிய எதிர்ப்பு அதிகமாகிவிட்டது. அது ஏன் தொடங்கியது? ஏனென்றால் சில மேற்கத்திய தலைவர்கள் பயங்கரவாதத்தை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு, இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் தீவிர இஸ்லாம் என்று அழைத்தனர்.

உலகில் ஒரே ஒரு இஸ்லாம் மட்டுமே உள்ளது, தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. இந்த இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணம். இது இஸ்லாமியர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் செப்டம்பர் 2001க்கு முன்பு பெரும்பான்மையான தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய அமைப்பு விடுதலை புலிகள் அமைப்பு. அந்த அமைப்பில் முஸ்லிம்கள் யாரும் கிடையாது. ஆனால் அதற்கு மத சாயம் பூசவில்லை. இது சரியானது. இலங்கையில் ஒரு சாரார் செய்த விஷயங்களுக்காக இந்து மதத்தை எப்படி தொடர்புபடுத்த முடியாதோ அப்படித்தான் இஸ்லாமும். தீவிரவாதம் என்பது இல்லாத ஒரு மதத்தில் உள்ள சிலர் செய்யும் வேலையை வைத்து முஸ்லிம்களை வேதனை படுத்தாதீர்கள்.

இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...