ஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி!

அக்டோபர் 12, 2019 332

டோக்கியோ (12 அக் 2019): ஜப்பானை தக்கிய கனோகவா புயலால் இதுவரை ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இந்த புயல் காரணமாக கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான மழையை ஜப்பான் சந்திக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஜப்பானை தாக்கியுள்ள கனோகவா புயலால் பல பகுதிகள் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாடே பின்க் நிறத்தில் மாறியுள்ளதும் மக்களை அச்சப்பட வைத்துள்ளது.

மேலும் இணையங்களில் ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டி கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...