மலேசியாவில் சீமானுக்கு செக்!

அக்டோபர் 15, 2019 442

கோலாலம்பூர் (15 அக் 2019): மலேசியாவில் சீமான் விடுதலைப் புலிகளை ஆதரித்து நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மலேசியாவில் விடுதலைப் புலிகள் தொடர்பான கைதுகளைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாள சீமான் மீது மலேசிய காவல் துறையின் கவனம் திரும்பியுள்ளது.

சீமான், புலிகளின் ஆதரவாளர் மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளின் நிறுவனர் மற்றும் தலைவரான வேலுபிள்ளை பிரபாகரனை தீவிரமாக பின்பற்றுபவராவார். விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் சீமான் மலேசியாவிற்கு பயணங்களை மேற்கொண்டதும், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் பல கூட்டங்களை நடத்தியுள்ள புகைப்படங்களும், காணொளிகளும் பரவலாக சமூகப் பக்கங்களில் பதிவிடப்பட்டன.

புலிகள் போராட்டங்களை மீண்டும் தொடங்க மலேசியாவில் ஆதரவைத் திரட்டுவதை நோக்கமாக அக்கூட்டங்கள் நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

சீமான் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேர்ப்பதில் அல்லது பயங்கரவாதக் குழுவை ஊக்குவிப்பதில் அவரது பங்கு எவ்வளவு ஆழமானது என்பதை ஆராய்ந்து வருவதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...