இந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா? - பாகிஸ்தான் விளக்கம்!

அக்டோபர் 21, 2019 262

இஸ்லாமாபாத் (21 அக் 2019): பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இதியா தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் அதனை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் கூறுகையில், "எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்தியா செய்தி வெளியிட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த முகாம்கள் பற்றிய தகவல்களை இந்தியாவிடம் கேட்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவின் பொய்யை அம்பலப்படுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளின் தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்துச்சென்று காட்டத்தயாராக இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல பாகிஸ்தான் ராணுவமும் இந்திய ஊடகங்களில் வெளியான தகவலை மறுத்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் இறந்திருக்கலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...