மனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்!

அக்டோபர் 23, 2019 351

லண்டன் (23 அக் 2019): 39 பிணங்களுடன் கன்டெய்னர் லாரி ஒன்றை மடக்கிப் பித்துள்ளனர் லண்டன் காவல்துறையினர்.

லண்டன் நகரின் தொழிற்பேட்டை சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்று சந்தேகத்திற்கு இடமாக வந்ததை பார்த்த போலீசார் அதனை சோதனையிட்டனர். அதில் 39 மனித உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லாரியை ஓட்டி வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மனித உடல்களை அடையாளம் காணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த லாரி பல்கேரியாவிலிருந்து கடந்த அக்டோபர் 19-ம் தேதி கிளம்பியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது மனித உடல் கடத்தலா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...