காதலனை பழி வாங்க காதலி செய்த காரியம் - எப்பா நினைத்தாலே பகீர் என்கிறது!

நவம்பர் 05, 2019 365

அர்ஜெண்டினா (05 நவ 2019): காதலனை பழி வாங்க காதலி காதலனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்ததற்காக காதலிக்கு . 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரெண்டா பெரட்டினி (Brenda Barattini) என்ற 28 வயதுடைய பெண், 42 வயதான ஃபெர்னாண்டஸ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ஃபெர்னாண்டஸ், தான் பெரட்டினியுடன் உறவு வைத்து கொண்டதை ரகசியமாக வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பெரட்டானி அதிர்ச்சியடைந்தார். மேலும் தன்னை ஏமாற்றிய ஃபெர்ணாண்டஸை பழிவாங்கவும் முடிவெடுத்தார். இதனையடுத்து ஒரு நாள் ஃபெர்னாண்டஸை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த ஃபெர்னாண்டஸை பெரட்டினி உறவுக்கு அழைத்துள்ளார்.

அவரும் சம்மதித்து ஒரு அறையில் வைத்து உடையை களைந்துள்ளார். அப்போது பெரட்டானி ரகசியமாக வைத்திருந்த பிளேடால் ஃபெர்ணாண்டஸின் மர்ம உறுப்பை அறுத்து எறிந்தார். இதனால் ஃபெர்ணாண்டஸ் 10 நாட்கள் கோமாவில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குற்றத்தை ஒப்புக் கொண்ட பெரட்டானிக்கு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...